Home One Line P2 பிக்பாஸ் 4 : ஷிவானி வெளியேற்றப்பட்டார்

பிக்பாஸ் 4 : ஷிவானி வெளியேற்றப்பட்டார்

2060
0
SHARE
Ad

சென்னை :ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் (4) தொடரில்  நேற்று  ஞாயிற்றுக்கிழமை (ஜனவவரி 10) நடைபெற்ற நிகழ்ச்சியில்  நடிகை ஷிவானி பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் இல்லத்திலிருந்து கடந்த வாரம் ஆஜித் வெளியேற்றப்பட்டார்.

தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் இல்லத்தில் எஞ்சியிருக்கும் நிலையில் அந்த 7 பேருமே வெளியேற்றப்பட சகப் போட்டியாளர்களால் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

#TamilSchoolmychoice

இவர்களின் சோம் சேகர் நடைபெற்ற போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற காரணத்தால் நேரடியாக இறுதிச் சுற்றுப் போட்டிக்கு தேர்வாகி விட்டார்.

எஞ்சியவர்களில் நடிகர் ஆரி காப்பாற்றப்பட்டிருப்பதாக சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் பாலாஜி காப்பாற்றப்பட்டிருப்பதாகக் கூறிய கமல்ஹாசன் இறுதியில் ஷிவானி வெளியேற்றப்பட இரசிகர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார் என அறிவித்தார்.

எனவே, தற்போது பிக்பாஸ் இல்லத்தில் எஞ்சியிருக்கும் 6 பேர் ஆரி, பாலாஜி,ரம்யா பாண்டியன், கேப்பிரியல்லா, சோம் சேகர், ரியோ ஆகியோர் ஆவர்.

இவர்களே இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியிருக்கிறார்கள்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஷிவானியைப் பின்னர் மேடைக்கு அழைத்த கமல் அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சக பங்கேற்பாளர்களுடன் தொலைக்காட்சி வழி ஷிவானி உரையாடினார்.