Home One Line P2 பிக் பாஸ் : 1 மில்லியன் ரூபாயுடன் வெளியேறிய கேப்பிரியல்லா

பிக் பாஸ் : 1 மில்லியன் ரூபாயுடன் வெளியேறிய கேப்பிரியல்லா

1397
0
SHARE
Ad

சென்னை : தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் “பிக்பாஸ்” தொடரின் நான்காவது பருவம் (சீசன் 4) இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜனவரி 17) நிறைவுக்கு வருகிறது.

இறுதிச் சுற்றுக்கு 6 பேர் தேர்வாகியுள்ளனர். ஆரி, சோம் சேகர், ரியோ, கேப்பிரியல்லா, ரம்யா கிருஷ்ணன், பாலாஜி ஆகியோரே அந்த அறுவராவார்.

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு வந்திருக்கும் ஆறு பேர்களில் யாராவது ஒருவர் வெளியேற நினைத்தால் 1 மில்லியன் ரூபாயை (10 இலட்சம் ரூபாய்) பெற்றுக் கொண்டு வெளியேறலாம் என பிக்பாஸ் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து கேப்பிரியல்லா அந்த 10 இலட்ச ரூபாய் அடங்கிய பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேற முடிவெடுத்தார். மற்ற சக பங்கேற்பாளர்களால் இறுதி வரை போட்டியில் நீடிக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.

இருப்பினும் அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தார் கேப்பிரியல்லா. நான் எடுக்காவிட்டால் ரியோ அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறிவிடுவார் எனவும் கேப்பிரியல்லா தெரிவித்தார்.

பங்கேற்பாளர்கள் யார் சொன்னதையும் கேட்காமல் 10 இலட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியேறினார் கேப்பிரியல்லா. பின்னர் அவரை மேடைக்கு அழைத்து அவரது அனுபவங்களை கமல் கேட்டார். மற்ற பங்கேற்பாளர்களுடன் தொலைக்காட்சி வழி உரையாடவும் செய்தார்.

இன்று நடைபெறும் இறுதி நிகழ்ச்சியில் கடந்த முறை வெற்றியாளரான முகேன் ராவும் பங்கேற்கிறார்.