Home One Line P2 பிக் பாஸ் இறுதிச் சுற்று : சோம் சேகர் வெளியேற்றப்பட்டார்

பிக் பாஸ் இறுதிச் சுற்று : சோம் சேகர் வெளியேற்றப்பட்டார்

755
0
SHARE
Ad

சென்னை : தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் “பிக்பாஸ்” தொடர் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜனவரி 17) நிறைவுக்கு வருகிறது.

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு வந்திருக்கும் ஆறு பேர்களில் யாராவது ஒருவர் வெளியேற நினைத்தால் 1 மில்லியன் ரூபாயை (10 இலட்சம் ரூபாய்) பெற்றுக் கொண்டு வெளியேறலாம் என பிக்பாஸ் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து கேப்பிரியல்லா அந்த 10 இலட்ச ரூபாய் அடங்கிய பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து இன்றைய இறுதிச் சுற்றில் ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றனர். சோம் சேகர், ரியோ, பாலாஜி, ஆரி, ரம்யா பாண்டியன் ஆகியோரே அந்த ஐவராவர்.

அவர்களில் இருந்து ஒருவர் ஒருவராக இறுதிச் சுற்றில் வெளியேற்றப்படுகின்றனர்.

அதன்படி சோம் சேகர் முதலில் வெளியேறுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். அவரை பிக்பாஸ் இல்லத்தின் உள்ளே சென்று கடந்த ஆண்டு வெற்றியாளர் மலேசியர் முகேன் ராவ் வெளியே அழைத்து வந்தார்.

அடுத்ததாக, இன்னொருவரை வெளியேற்ற வேண்டுமென கடந்த ஆண்டு பங்கேற்பாளரான கவினை கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்திருக்கிறார்.