Home One Line P1 நஜிப், சாஹிட்டுக்கு கொவிட்-19 தொற்று இல்லை

நஜிப், சாஹிட்டுக்கு கொவிட்-19 தொற்று இல்லை

446
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய பல கொவிட்-19 தொற்று சம்பவங்களுக்குப் பிறகு, கட்சியின் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் நஜிப் ரசாக் இருவரும் இன்று தொற்று ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தததை அடுத்து அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இன்று காலை 7.44 மணியளவில் தனது மனைவிக்கு செய்தி தெரிவிக்கப்பட்டதாக முகநூலில் சாஹிட் கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், நஜிப், இது தாம் மேற்கொள்ளும் 15- வது முறை பரிசோதனை என்று கூறினார். அம்னோ தலைமையகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் சாஹிட், நஜிப் மற்றும் தாஜுடின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தாஜுடின் நேற்று கொவிட் -19 க்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டது.