கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர் (பொருளாதார விவகாரங்கள்) முஸ்தபா முகமட் கொவிட் -19 தொற்றில் இருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
முஸ்தபா, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட தனது அனுபவத்தையும் விவரித்துள்ளார். அவர் சுவாசப் பிரச்சனைகள் மற்றும் உடலில் வழு இல்லாமை ஆகியவற்றால் போராடியதாகக் கூறினார்.
“நான் மருத்துவமனையில் இருந்த 12 நாட்களில், நான் மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபோது மிகவும் ஆபத்தான காலம். அதிர்ஷ்டவசமாக, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடமிருந்து மிகுந்த கவனமும், கடவுள்மீது முழு நம்பிக்கையுடன் இருந்ததால் நான் குணமடைந்தேன். இப்போது நான் அதிக ஓய்வெடுக்க வேண்டும். குறைவாக வேலை செய்ய வேண்டும். பலரை சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும்,” என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் கூறினார்.