Home One Line P1 பள்ளி பொதுத் தேர்வுகள் எப்போதும் போல நடக்கும்

பள்ளி பொதுத் தேர்வுகள் எப்போதும் போல நடக்கும்

462
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் உள்ளிட்ட பொதுத் தேர்வுகளுக்கான மாணவர்கள் தேர்வுக்கு அமர அனுமதிக்கப்படுவதில்லை.

தொற்றுநோய் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பின்னரே அவர்கள் தேர்வுகளுக்கு அமர அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு இயக்குநர் டாக்டர் ஹபீபா அப்துல் ரகிம் கூறினார்.

“எஸ்பிஎம் தேர்வுக்கு பதிவுசெய்த மாணவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தேர்வை எழுதலாம். ஆனால் அவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு பாதிப்படைந்து மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், அவர்கள் தேர்வுகளுக்கு உட்கார முடியாது. பிற தேர்வுகள் தனிமைப்படுத்தும் காலத்திற்கு பிறகு எப்போதும் போல எழுதலாம்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பொது தேர்வுக்கு அமர அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னர், மருத்துவமனையிலிருந்து சுகாதார நிலை கடிதம் முதலில் பள்ளிக்கு ஆதாரமாக வழங்கப்பட வேண்டும். எனவே, ஒரு நல்ல காரணமின்றி மாணவர்கள் தேர்வில் அமராமல் இருக்க முடியாது என்று ஹபீபா கூறினார்.

எந்தவொரு கேள்வியும் கசிவதைத் தவிர்ப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட தேதியில் தேர்வுக்கு அமர முடியாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வேறு வினாத்தாள்களை வழங்கும்.

“எங்களிடம் இன்னொரு தொகுப்பு உள்ளது. ஆனால் தரநிலை மிக முக்கியமானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். , ” என்று அவர் விளக்கினார்.