Home One Line P1 அவசரநிலைக்கு எதிராக குரல் கொடுக்க பலர் பயப்படுகிறார்கள்

அவசரநிலைக்கு எதிராக குரல் கொடுக்க பலர் பயப்படுகிறார்கள்

490
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பலர் அவசரகால நிலைக்கு எதிராக இருக்கிறாகள், ஆனால் தண்டிக்கப்படுவார்கள் என்ற பயத்தில் பேசத் துணியவில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.

அவசரநிலை தேவையற்றது என்று நினைத்த பலருடன் பேசியதாக அவர் ஒரு வலைப்பதிவு இடுகையில் கூறினார்.

இருப்பினும், அவர் பேசியவர்கள் அனைவரும் அவசரகாலத்தின் கீழ் அசாதாரண அதிகாரங்களைக் கொண்ட அரசாங்கத்திற்கு எதிராகச் செல்ல அஞ்சுகிறார்கள் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அரசாங்கம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய முடியாது என்று தெளிவுபடுத்திய போதிலும், அவர் பேசியவர்கள் இன்னும் கவலைப்படுவதாக மகாதீர் கூறினார்.

“அரசாங்கத்தால் என்ன செய்ய முடியாது என்பதை நான் விளக்க முயன்றேன், ஆனால் அவர்கள் பயப்படுகிறார்கள். தங்கள் குரல்களைத் தாழ்த்தினார்கள். தங்கள் கருத்துகளை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் என்னிடம் சொன்னார்கள், ” என்று அவர் கூறினார்.

“அவசரநிலை திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற முறையீட்டு கடிதத்தில் கையெழுத்திடுமாறு கேட்டபோது, அவர்கள் மறுத்துவிட்டனர்,” என்று கூறினார்.