வாஷிங்டன்: அமெரிக்காவில் முதல் முறையாக அமெரிக்க இராணுவ அமைச்சராக ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் 4- வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றுள்ளார். இதன் மூலம், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பேசிய ஜோ பைடன், வெள்ளையின வாதம், தீவிரவாதத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அனைத்து அமெரிக்கர்களுக்கும் தாம் அதிபர் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக கறுப்பினத்தவர் ஒருவர் இராணுவ அமைச்சராக தேர்வாகியுள்ளார். அமெரிக்க இராணுவ அமைச்சர் தேர்வுக்கு அந்நாட்டின் செனட் சபையின் ஒப்புதல் அவசியம். அதற்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் லாயிட் ஆஸ்டினுக்கு ஆதரவாக 93 பேர் வாக்களித்துள்ளனர்.