Home One Line P2 ‘அமுவன்’ தொலைக்காட்சி திரைப்படத்தில் நடிகர்களுடன் சிறப்பு நேர் காணல்

‘அமுவன்’ தொலைக்காட்சி திரைப்படத்தில் நடிகர்களுடன் சிறப்பு நேர் காணல்

695
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஆஸ்ட்ரோவில் சிறப்புத் தொலைக்காட்சித் திரைப்படமாக – முதல் ஒளிபரப்பாக – ஒளியேறுகிறது “அமுவன்”.

பிரபல உள்ளூர் திரைப்பட இயக்குநர், சந்தோஷ் கேசவன் கைவண்ணத்தில் மலர்ந்த, பக்தித் திரைப்படம் “அமுவன்”. இதில் மோகன் ராஜ், பாஷினி சிவகுமார் மற்றும் தாஷ்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

‘அமுவன்’ தொலைக்காட்சித் திரைப்படத்தில் பங்கேற்ற நடிகர்களுடன் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நேர்காணலில் அந்தக் கலைஞர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர் :

சந்தோஷ் கேசவன், இயக்குநர்:

சந்தோஷ் கேசவன், இயக்குநர்:
#TamilSchoolmychoice

• பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய அமுவனைப் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டது உட்பட அனைத்தும் ஒரு குறிப்பிடத்தக்க ஆன்மீக அனுபவமாக இருந்தது. அனைத்து அறிவார்ந்த விஷயங்களையும் ஒரு படப்பிடிப்பில் அடக்குவது அணிச்சல் (கேக்) மீது ஐசிங் போடுவது போன்றது.

முருகப் பெருமான் மீது நம்முடைய நம்பிக்கைகளை ஈடுபடுத்தும் ஒரு நவீனக் காலக் கதை, அமுவன். வீட்டில் விசித்திரமாக நடந்துக்கொண்டிருக்கும் தங்களின் பார்வையற்றக் குழந்தையைக் காப்பாற்ற ஒரு மகிழ்ச்சியற்ற தம்பதியினர் தங்கள் ஆன்மீகக் கருத்து வேறுபாடுகளை மீறுகின்றனர். அவர்களின் பிரச்சனைகளின் முழு தீர்வு, அமுவன். இதுவே இந்த தொலைக்காட்சித் திரைப்படத்தின் கருப்பொருள். இது உண்மையிலேயே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். மலேசியர்கள் உட்பட அனைவரும் இன்றுவரைப் போற்றி வணங்கும் சிந்து சமவெளி நாகரிக தெய்வமான முருகப் பெருமானைப் பற்றிய அதிகம் அறியப்படாத சில சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்வதில் நான் ஊக்குவிக்கப்பட்டேன்.

மோகன் ராஜ் & பாஷினி சிவகுமார், நடிகர்கள்:

மோகன் ராஜ் & பாஷினி சிவகுமார்

மோகன்: கடவுளை நம்பாத, எல்லாவற்றையும் விஞ்ஞான விளக்கத்துடன் பார்ப்பதோடு தனது மகளின் பார்வைக் குறைபாட்டிற்கும் மருத்துவ ரீதியான தீர்வைத் தேடும் ‘ராகு’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். கடவுளை நம்பாத ஒருவராக நடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில், நான் கடவுளை முழு மனதுடன் நம்பும் ஒருவர். மேலும், நம் கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது என்பதையும் நான் நம்புகிறேன். இந்தப் படப்பிடிப்பில் நான் புதிதாக ஒன்றை அனுபவித்தேன்: ஒரு காட்சியில், பாஷினியும் நானும் இடையில் எந்தவொரு இடைவெளியும் இல்லாமல் ஒரு நீண்ட வாதக் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. எனவே, நாங்கள் சரியான இடத்தில் நிற்பதோடு ஒருவருக்கொருவர் மறைக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியிருந்தது.

பாஷினி

பாஷினி: ஒரு பக்தியுள்ள இல்லத்தரசி மற்றும் அம்மாவான ‘ஜானகி’ எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்தேன். ஒரு தாயின் எல்லையற்ற அன்பை சித்தரிக்கும் ஒரு கதாபாத்திரம். எனவே, இந்தப் பாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடியுமா என்று ஆரம்பத்தில் நான் கவலைப்பட்டேன். அதிர்ஷ்டவசமாக, இயக்குநர், சந்தோஷ் கேசவனுடன் திரைக்கதை வாசிப்பும், மற்றும் படப்பிடிப்பிற்கு முந்தைய கற்றல்களும் அவரின் நோக்கத்தையும் எதிர்பார்ப்பையும் புரிந்துக் கொள்ள உதவியது.

அதுமட்டுமின்றி, என்னுடன் மோகன் ராஜ் மற்றும் குழந்தை, தாஷ்ரா என சிறந்த சக நடிகர்கள் இருந்தனர். அவர்கள் செயல்முறைகளை மேலும் எளிதாக்கினர். அமுவனில் நடித்த மிகவும் சுவாரசியமான தருணம் குழந்தை, தாஷ்ராவுடன் திரையைப் பகிர்ந்துக் கொண்டதே ஆகும். நாங்கள் ஒரு படப்பிடிப்பில் இருந்ததைக்கூட நான் மறக்கும் அளவுக்கு எங்களுக்கிடையில் ஒரு சிறந்தப் பிணைப்பு இருந்தது. பல நினைவுகள் பசுமரத்தாணி போல் பதிந்தன.