Home One Line P2 சசிகலா மருத்துவமனையிலிருந்து வெளியேறுகிறார்

சசிகலா மருத்துவமனையிலிருந்து வெளியேறுகிறார்

711
0
SHARE
Ad

பெங்களூரு : சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்கான சிகிச்சை முடிவடைந்திருக்கிறது, அதனால் அவர் மருத்துவமனையில் இருந்து இன்று விடுவிக்கப்படுவார் என அவர் சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனை அறிவித்திருக்கிறது.

அவர் உடனடியாக இன்றைக்கே சென்னை திரும்புவாரா அல்லது தொடர்ந்து மருத்துவமனையிலேயே ஓய்வெடுப்பாரா, அல்லது பெங்களூருவில் தங்கி ஓய்வெடுப்பாரா என்பது குறித்த உறுதியான தகவல்கள் இதுவரை இல்லை.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் அவரது விடுதலையைத் தொடர்ந்து, விரைவில் நடைபெறவிருக்கும் தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து அவர் என்ன முடிவெடுப்பார் என்பதைத் தெரிந்து கொள்ள தமிழக அரசியல் வட்டாரங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.