Home One Line P2 ஆஸ்ட்ரோ: முதல் ஒளிபரப்பு காணும் சுவாரசியமான உள்ளூர் தமிழ் தொடர்கள்

ஆஸ்ட்ரோ: முதல் ஒளிபரப்பு காணும் சுவாரசியமான உள்ளூர் தமிழ் தொடர்கள்

795
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணும் உள்ளூர் தமிழ் தொடர்களை இரசிகர்கள் கண்டு மகிழலாம்.

‘அசுர வேட்டை’, எனும் அமானுஷ்ய தொடரும் மற்றும் ‘இப்படிக்கு இலா’, எனும் நகைச்சுவைத் தொடரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் 2021 பிப்ரவரி 1-ஆம் தேதி அன்று முதல் ஒளிபரப்புக் காணும் இரண்டு உள்ளூர் தமிழ் தொடர்களான, ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) அசுர வேட்டை தொடரையும் மற்றும் ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201) இப்படிக்கு இலா தொடரையும் கண்டு மகிழலாம்.

#TamilSchoolmychoice

‘ஆசான்’ திரைப்படத்தை இயக்கிய உள்ளூர் திரைப்பட இயக்குநர் எஸ்.டி. புவனேந்திரன் இயக்கிய அசுர வேட்டை எனும் 20 அத்தியாயங்களைக் கொண்ட அமானுஷ்ய தொடரில், ஹரிதாஸ், சங்கீதா கிருஷ்ணசாமி, பானுமதி மற்றும் வெமன்னா அப்பனா உள்ளிட்ட பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர்.

‘அசுர வேட்டை’ ஹரிதாஸ் மற்றும் சங்கீதா கிருஷ்ணசாமியின் முதல் தொடராகும். இந்த சுவாரசியமானக் கதை சில்வா எனும் தடயவியல் புலனாய்வாளரைச் சித்தரிக்கின்றது.

அவர் பதிவு செய்தக் குற்ற காணொளிகளில் இடம்பெற்ற இறந்தவர்கள் அக்காணொளிகள் வாயிலாகத் தன்னைத் தொடர்புகொள்வதை உணர்கிறார். அவரது அன்பான மனைவி தன்னை விட்டு விலகவே அவரது வாழ்க்கை வீழ்ச்சியடையத் தொடங்குகிறது. மேலும், தொடர்ச்சியான இணைக்கப்பட்ட, சந்தேகத்திற்கிடமான கொலைகள் அவரது வேலையில் நேரத்தை விரயமாக்கின. ஒவ்வொரு கொலையும் அதன் காட்சியும் அவரை பயமூட்டவே சில்வா இனி ‘அதனை’ புறக்கணிக்க முடியாது என்பதை உணர்கிறார். வாடிக்கையாளர்கள் அசுர வேட்டை தொடரை இரவு 9 மணிக்கு, திங்கள் முதல் வெள்ளி வரை ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) கண்டு மகிழலாம்.

மேலும், ஹரிந்தரா நந்த குமார், தனேஷ் ரூபன் அலகராசு, சஷ்வின் சந்திரசேகரன், யுவராஜ் கிருஷ்ணசாமி, கே.பிரகாஷ் மற்றும் கிரானா ராமச்சந்திரன் ஆகியோர் நடித்த, உள்ளூர் திறமை ஆதி பாஸ்கரன் இயக்கிய நகைச்சுவை நாடகத் தொடரான இப்படிக்கு இலா தொடரை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

13 அத்தியாயங்களைக் கொண்ட இந்நகைச்சுவைத் தொடர் இயக்குநர் ஆதி பாஸ்கரனுக்கு அறிமுகத் தொடராகும். 1990-ஆம் ஆண்டில் பிறந்த இலக்கியன் என்ற சிறுவனைச் சித்தரிக்கின்றது. அவனின் அப்பாவித்தனம், ஆர்வம் மற்றும் குறும்புத்தனம் ஆகியவை அவனைத் தொடர்ந்துத் தனது தாயுடன் சிக்கலுக்குள்ளாகவே அவனது தந்தை அவனுக்கு ஆதரவளித்தார். சன்வே புறநகரில் உள்ள ஒரு பிளாட்டில் வசிக்கும் இலா எனும் சிறுவனின் மூன்று வெவ்வேறு கட்டங்களில் அவனது வாழ்க்கையை இக்கதை விவரிக்கிறது. ஒவ்வொரு கட்டமும் 90-ஆம் ஆண்டுகளின் சகாப்தத்தை சித்தரிக்கின்றது. அதே நேரத்தில், இலாவின் பெற்றோருடனான அவனது உறவை வெளிக்கொணர்கிறது. ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201), இரவு 8 மணிக்கு இப்படிக்கு இலா தொடரை கண்டுக் களியுங்கள்.

பிப்ரவரி 1 முதல் ஆஸ்ட்ரோ, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாக வாடிக்கையாளர்கள் முதல் ஒளிபரப்புக் காணும் இந்த தொடர்களைக் கண்டு களிக்கலாம்.

மேல் விவரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.