24 மணி நேரத்திற்கும் குறைவான இந்த பயணத்தில் பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் மற்றும் பல மூத்த அதிகாரிகள் உட்பட ஒரு சிறிய தூதுக்குழுவும் சென்றுள்ளது.
“இரு நாடுகளின் நலன்களை உள்ளடக்கிய பல விஷயங்கள் உள்ளன. அவை பொருளாதார ஒத்துழைப்பு, வட்டார மற்றும் இருதரப்பு பாதுகாப்பு போன்ற முக்கியமான பிரச்சனைகள் மற்றும் கொவிட் -19 தொற்றுநோயை எதிர்ப்பதில் கூட்டு முயற்சிகள் உள்ளிட்ட முக்கியமான கலந்துரையாடல் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு தேவைப்படுகிறது. இதனால், இரு நாடுகளின் தலைவர்களும் நேருக்கு நேர் சந்திப்பு நடத்த ஒப்புக் கொண்டுள்ளனர்,” என்று வெளியுறவு அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மொகிதினின் இந்தோனிசிய வருகை தொடர்பான படக் காட்சிகளை இங்கே காணலாம்:
படங்கள் நன்றி : பிரதமர் மொகிதின் யாசின் முகநூல் பக்கம் / ஜோகோவி விடோடோ டுவிட்டர் பக்கம்