Home One Line P1 சீனப் புத்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையில் மாற்றம்

சீனப் புத்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையில் மாற்றம்

666
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையில், ஒரு வீட்டிற்கு 20 பேர் என்ற அதிகபட்ச வரம்பு விதிமுறையை தேசிய பாதுகாப்பு மன்றம் இரத்து செய்துள்ளது.

இருப்பினும், இப்புதிய நடைமுறை, கொண்டாட்டத்தின் போது இரவு உணவை ஒரே வீட்டிலிருக்கும் குடும்ப உறுப்பினர்களால் மட்டுமே கொண்டாட முடியும் என்ற விதியை அது தொடர்கிறது.

“சீனப் புத்தாண்டு இரவு உணவு ஒரே வீட்டில் உள்ள முழு குடும்பத்திற்கும் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது,” என்று தேசிய பாதுகாப்பு மன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பிப்ரவரி 4 அன்று வெளியிடப்பட்ட நடைமுறை மூலம், பெரிய விருந்து ஒரே வீட்டிலிருந்து அதிகபட்சம் 20 பேருக்கு மட்டுமே என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பாரம்பரியமாக நாடு முழுவதும் உள்ள சீன சமூகம் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முந்தைய இரவில் குடும்பமாக ஒன்று கூடி இரவு உணவு உட்கொள்வது வழக்கம்.