கோலாலம்பூர்: பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னர் டாக்டர் மகாதீர் முகமட் தானே நம்பிக்கை கூட்டணியுடன் இருக்க வேண்டாம் என்று தேர்வு செய்தார் என்று பி.கே.ஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
நம்பிக்கை கூட்டணி அரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, முன்னாள் பெர்சாத்து தலைவர் நம்பிக்கை கூட்டணி சந்திப்பில் கலந்து கொள்வதற்கான அழைப்பை மறுத்துவிட்டார் என்றும் சைபுடின் கூறினார்.
“பிரதமர் பதவி விலகிய உடனேயே, நம்பிக்கை கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டேன். அக்கூட்டத்தில் கலந்து கொண்டால், அவரை ஆதரிக்கும் நம்பிக்கை கூட்டணி அல்லாத கட்சிகளுடனான கூட்டத்திலும் துன் கலந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் துன் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். அந்த முடிவின் மூலம், அவர் நம்பிக்கை கூட்டணியுடன் இருக்க வேண்டாம் என்று தேர்வு செய்தார் என்பது தெளிவாகிறது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.