கோலாலம்பூர்: நேற்றைய நிலவரப்படி சிலாங்கூர் நாட்டில் 1.13 கொவிட் -19 நோய்த்தொற்று வீதத்தை பதிவு செய்துள்ளதாக சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் பகிரப்பட்ட விளக்கப்படத்தின் அடிப்படையில், ஜோகூர் இரண்டாவது மிக உயர்ந்த நோய்த்தொற்று வீதத்தைப் பதிவு செய்துள்ளது. அதாவது 1.12 ஆக பதிவுசெய்துள்ளது. அடுத்து மலாக்கா (1.09), கோலாலம்பூர் (1.06), சரவாக் (1.05), பகாங் (1.01) மற்றும் திரெங்கானு (1.00).
மற்ற மாநிலங்கள் பேராக் 0.95, பினாங்கு (0.92), நெகிரி செம்பிலான் (0.89), லாபுவான் (0.88), கெடா (0.86), சபா (0.85), புத்ராஜெயா (0.80), கிளந்தான் (0.76) மற்றும் பெர்லிஸ் (0.62) .
முழு நாட்டிற்கும் நோய்த்தொற்று வீதம் 0.99 என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.