Home One Line P2 நடிகர் சூர்யாவுக்கு கொவிட்-19 தொற்று

நடிகர் சூர்யாவுக்கு கொவிட்-19 தொற்று

906
0
SHARE
Ad

சென்னை: நடிகர் சூர்யா தனக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாகதெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

“கொரோனாபாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

சூர்யாவின் பதிவிற்கு, நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ், சூர்யா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

சூர்யாவுக்கு கொவிட்-19 ஏற்பட்டுள்ளதை அறிந்த திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.