Home One Line P1 ‘மலாய் கட்சிகளை ஒன்றிணைப்பதை ஒருபோதும் கைவிட மாட்டேன்!’- அனுவார் மூசா

‘மலாய் கட்சிகளை ஒன்றிணைப்பதை ஒருபோதும் கைவிட மாட்டேன்!’- அனுவார் மூசா

490
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தனது சொந்த கட்சியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள போதிலும், மலாய் கட்சிகளை ஒன்றிணைக்க ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று தேசிய முன்னணி முன்னாள் பொதுத் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா வலியுறுத்தியுள்ளார்.

“ஒரு மலாய் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று கூறப்பட்டு நான் நீக்கப்பட்டாலும் நான் ‘கைவிட மாட்டேன்’. எனது கட்சி மற்ற அனைத்து மலாய் கட்சிகளுடனும் ஒருமித்த கருத்தையும் ஒத்துழைப்பையும் கோரினால் மட்டுமே எனது கட்சி வலுவாக இருக்கும் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். மேலும் பல இன மற்றும் பல மத நாட்டில் மற்ற கட்சிகள் மற்றும் இனங்களுடன் ஒற்றுமையை மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள், ” என்று அவர் இன்று காலை தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

தேசிய கூட்டணியில் அனுவார் பெர்சாத்து பக்கம் சாய்ந்ததாகக் கூறப்பட்டார். அம்னோ தலைமை பெர்சாத்துவுடனான ஒத்துழைப்பை முறித்துக் கொள்ள முயற்சித்ததைக் கண்டதும், அதற்கு பதிலாக அனுவார் அதனை தற்காத்துப் பேசினார்.

#TamilSchoolmychoice

மார்ச் 2020- இல் அகமட் மஸ்லானுக்குப் பதிலாக அம்னோவின் பொதுச் செயலாளராக அனுவார் நியமிக்கப்பட்டார்.