புது டில்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த, கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் அவசர தேவைக்கு பயன்படுத்த தேசிய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, கடந்த மாதம் 16- ஆம் தேதி முதல் சுகாதார ஊழியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட முன்னணி பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசியானது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே போடப்பட்டு வந்தது. இந்நிலையில், இரண்டு வயது முதல் 18 வயதுள்ள சிறுவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனையை பாரத் பயோடெக் தொடங்கவுள்ளது.
இதற்கான அனுமதியை அந்நிறுவனம் மத்திய அரசிடம் கோரியுள்ளது. அதன்படி, இரண்டு வயதில் இருந்து ஐந்து வயது வரை, ஆறு முதல் 12 வயது வரை, 12 வயதில் இருந்து 18 வயது வரை என மூன்று பிரிவுகளில் இந்த பரிசோதனை நடைபெறும்.
உலகிலேயே குழந்தைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி பரிசோதனையை இந்தியாதான் முதன் முதலாக நடத்துகிறது.