கோலாலம்பூர்: இந்த மாதத்தின் முதல் வாரத்தில், 10 கொவிட் -19 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன்பே இறந்துவிட்டனர்.
இந்த மாதத்தில் இத்தகைய சம்பவத்தில் 18 வயது பெண் ஒருவர், செலாயாங் மருத்துவமனையில் இறந்து மரணமுற்றார். அவருக்கு கொவிட்-19 தொற்று ஆஸ்துமாவால் அதிகரித்தது.
அவரது மரணத்தை சுகாதார அமைச்சகம் தனது தினசரி புள்ளிவிவரங்களில் நேற்று தெரிவித்தது.
மலேசியாகினியின் கண்காணிப்பின்படி, கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட 22 பேர் கடந்த ஆண்டு டிசம்பரில் வீட்டிலேயே இறந்தவர்களாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரியில் மேலும் 41 பேர் இறந்துள்ளனர்.
அதாவது டிசம்பர் முதல், பதிவு செய்யப்பட்ட 512 பேரில் 73 பேர் வீட்டில் இறந்துள்ளனர்.
கடந்த மாத தொடக்கத்தில், சுகாதார அமைச்சர் அடாம் பாபா, கொவிட் -19 நோயாளிகளுக்கு இலேசான அல்லது அறிகுறிகள் இல்லாதவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் விதிமுறையை அறிவித்தார். இருப்பினும், கொவிட் -19 நோயாளியின் நிலைமை மோசமடைகிறதா என்பதைக் கண்காணிக்க மருத்துவ யாரும் நிபுணர் இல்லை.