Home One Line P1 சபா: கடந்தாண்டு கடைசியில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது

சபா: கடந்தாண்டு கடைசியில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது

452
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சபாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் 30.6 விழுக்காடு ஆக உயர்ந்தது.

புள்ளிவிவரத் துறையின்படி, 2019-ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது மாநிலத்தில் 868- க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் கொவிட் -19 காரணமாக சபா மற்றும் லாபுவான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.

அதிகாரப்பூர்வமாக, 2018-2019 காலக்கட்டத்தில், சபா 252 கொவிட் -19 தொடர்பான இறப்புகளைப் பதிவுசெய்தது, லாபுவான் ஒன்பது இறப்புகளை பதிவு செய்தது.

#TamilSchoolmychoice

சபாவில் கொவிட் -19 பாதிக்கப்பட்டவர்களில் 191 மலேசியர்களும் 61 வெளிநாட்டவர்களும் அடங்குவர்.