Home One Line P1 கட்டுப்பாட்டு ஆணை நீக்கப்பட்டதும், மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை

கட்டுப்பாட்டு ஆணை நீக்கப்பட்டதும், மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை

422
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை தொடர்ந்து விதிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

கொவிட் -19 தொற்றுநோயை வீதத்தை குறைவாக வைத்திருப்பதற்கும் எல்லை தாண்டிய தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் இந்த முடிவு என்று அதன் அமைச்சர் டக்டர் அடாம் பாபா இன்று தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீக்கப்பட்ட பின்னரும், இந்தத் தடை நீடிக்கக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

#TamilSchoolmychoice

“பிப்ரவரி 18 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும். இன்று பிப்ரவரி 10, இன்னும் எட்டு நாட்கள் உள்ளன. நாம் இப்போது இருப்பதைப் போலவே மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களை தடை செய்ய வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம். கொவிட் -19 தொற்றை குறைக்க வேண்டும். நாம் நிறைய பரிசோதனைகளை செய்வதால் சம்பவங்கள் குறைந்து வருவதற்கான அறிகுறிகளைக் காண்கிறோம் ” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.