கோலாலம்பூர்: நேற்று இரவு செர்டாங் மெப்ஸில் கொவிட்-19 குறைந்த ஆபத்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கலவர எதிர்ப்பு காவல் துறையினர் நிறுத்தப்பட்டனர்.
அங்கு கைபேசி திருடப்பட்டது குறித்து நோயாளிகளுக்கு இடையே ஏற்பட்ட குழப்பத்திற்குப் பிறகு காவல் துறையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
இரவு 10.30 மணியளவில் நான்கு கைபேசிகள் திருடியதன் பேரில் நோயாளிகள் இரண்டு நோயாளிகளை தடுத்து வைத்தபோது இந்த சம்பவம் நடந்தது.
மருத்துவரால் தெரிவிக்கப்பட்ட பின்னர் நிலைமையைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் நிறுத்தப்பட்டதாக செபாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோப் கூறினார்.
சந்தேக நபர்கள் இருவருமே காவல் துறை தடுப்புக்கு மாற்றப்படுவதற்கு முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை அனுபவிப்பர்.
சந்தேக நபரால் திருடப்பட்டதாக நம்பப்படும் நான்கு கைபேசிகள் இப்போது விசாரணைக் குழுவால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.