Home One Line P1 கெராக்கான் தேசிய கூட்டணியில் இணைந்தது

கெராக்கான் தேசிய கூட்டணியில் இணைந்தது

677
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கெராக்கான் கட்சி இப்போது தேசிய கூட்டணியில் ஒரு கூட்டணி கட்சியாக இருப்பதை அதன் தலைவர் டொமினிக் லாவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரதமரிடமிருந்து உறுதிப்படுத்தலைப் பெற்றதாக டொமினிக் லாவ் ஹோ சாய் கூறினார்.

“தேசிய கூட்டணியில் நாங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளோம் என்பதற்கான உறுதிப்பாட்டை நாங்கள் பெற்றுள்ளோம்,” என்று அவர் எப்எம்டிக்கு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஏற்றுக்கொள்ளும் கடிதத்தில் மொகிதின் யாசின் கையெழுத்திட்டார் என்று லாவ் கூறினார். எப்எம்டி பார்வையிட்ட ஒரு கடிதத்தில், கெராக்கானை கூட்டணியில் ஏற்றுக்கொள்ள தேசிய கூட்டணி உச்ச மன்றம் ஒப்புக் கொண்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.