Home One Line P2 சிங்கப்பூர்: ஆண்டு இறுதிக்குள் கொவிட் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்படும்

சிங்கப்பூர்: ஆண்டு இறுதிக்குள் கொவிட் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்படும்

542
0
SHARE
Ad

சிங்கப்பூர்: இந்த ஆண்டுக்குள் சிங்கப்பூர் குடிமக்கள் அனைவருக்கும் கொவிட் -19 தடுப்பூசிகளை வழங்க முடியும் என்று அதன் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

ஜனவரி 29-ஆம் தேதி முழு தடுப்பூசியைப் பெற்ற லீ, சிங்கப்பூரில் 250,000 பேர் தடுப்பூசி பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

“நாங்கள் பெரும்பாலான முன்னணி பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம். இப்போது 70 வயதிற்கு மேற்பட்டவர்களிடமிருந்து தொடங்கி மூத்தவர்களுக்கு தடுப்பூசி போடுகிறோம்,” என்று அவர் இன்று சிங்கப்பூரில் வெளியிட்ட தனது சீனப் புத்தாண்டு செய்தியில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பிபைசர்-பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தது. சிங்கப்பூர் தடுப்பூசி செலுத்துவதை டிசம்பர் 30 அன்று தொடங்கியது.

பிப்ரவரி 3-ஆம் தேதி, சிங்கப்பூர் இரண்டாவது கொவிட் -19 தடுப்பூசி, மாடர்னாவிற்கு இடைக்கால அங்கீகாரத்தை வழங்கியது. இது மார்ச் மாதத்தில் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.