Home நாடு ஹிண்ட்ராப்பின் ஐந்தாண்டுத் திட்டவரைவில் இன்று நஜிப் கையெழுத்திடுகிறார்!

ஹிண்ட்ராப்பின் ஐந்தாண்டுத் திட்டவரைவில் இன்று நஜிப் கையெழுத்திடுகிறார்!

460
0
SHARE
Ad

hindraf

கோலாலம்பூர், ஏப்ரல் 18 – ஹிண்ட்ராப் இயக்கம் இந்திய சமூகத்தின் நலனுக்காக உருவாக்கிய ஐந்தாண்டு திட்ட வரைவினை தேசிய முன்னணி ஏற்றுக்கொண்டுள்ளது.

இது குறித்து ஹிண்ட்ராப் இயக்கத்தின் தேசிய ஆலோசகர் என்.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

#TamilSchoolmychoice

“கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், விவேகானந்தா தமிழ்ப்பள்ளி அரங்கத்தில், இன்று மாலை 6.00 மணியளவில் பிரதமர் நஜிப் ஹிண்ட்ராப் இயக்கத்தின் ஐந்தாண்டு திட்ட வரைவில் கையெழுத்திடுவார்” என்று தெரிவித்தார்.

இது பற்றி மேலும் விளக்கமளிக்க மறுத்த கணேசன் “நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேரில் தெரிந்து கொள்ளுங்கள்” என்று அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி மற்றும் அவ்வியக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.