Home One Line P1 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தவறும் முதலாளிகளுக்கு சிறை

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தவறும் முதலாளிகளுக்கு சிறை

562
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தொழிற்சாலைகளின் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யத் தவறும் முதலாளிகள் சிறைத் தண்டனையை எதிர்கொள்வர்.

தொழிலாளர்கள் வீட்டுவசதி மற்றும் வசதிகளின் குறைந்தபட்ச தரநிலைகள் (திருத்தம்) சட்டம் 2019 (சட்டம் 446) ஐ மீறியதற்காக இந்த முதலாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக 200,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

“தேசிய நோய்த்தடுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் போது அனைத்து முதலாளிகளும் தங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே கொவிட் -19 தொற்றுக் குழுக்களின் எழுச்சியை சமாளிப்பதே இந்த கட்டளை என்று சரவணன் கூறினார்.

“புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லது தங்களின் தங்குமிடங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் தடுப்பூசி பெறுவதை உறுதி செய்யத் தவறும் முதலாளிகள் 446 சட்டத்தின் கீழ் குற்றத்தைச் செய்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.