கோலாலம்பூர்: தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தில், நாடு முழுவதும் அதிக ஆபத்துக் கொண்ட 55,539 ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்புத் தலைவர், அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
வருகிற புதன்கிழமை தொடங்கி கொவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் முதல் கட்டத்தில் ஆசிரியர்களும் சேர்க்கப்படுவர் என்று துணை கல்வி அமைச்சர் முஸ்லீம் யஹாயா தெரிவித்திருந்தார். கல்வி அமைச்சகம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சகத்துடன் கலந்துரையாடி வருவதாக கூறியிருந்தார்.
முன்னதாக, கொவிட் -19 தடுப்பூசி பெறுபவர்களில் முதல் கட்டமாக இருக்க விரும்பும் கல்வியாளர்கள் உட்பட சில குழுக்களிடமிருந்து அரசாங்கம் பல விண்ணப்பங்களைப் பெற்றதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் முன்பு கூறியிருந்தார்.