Home One Line P1 அவசரநிலை பிரகடனத்தின் போது நாடாளுமன்றம் கூடலாம்- மாமன்னர்

அவசரநிலை பிரகடனத்தின் போது நாடாளுமன்றம் கூடலாம்- மாமன்னர்

512
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அவசரநிலை பிரகடனத்தின் போது, பிரதமரின் ஆலோசனையின் பேரில் மாமன்னர் பொருத்தமானதாகக் கருதும் ஒரு தேதியில் நாடாளுமன்றம் கூட முடியும் என்று மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் கூறியுள்ளார்.

இது குறித்து அரண்மனை காப்பாளர் டத்தோ அகமட் பாடில் ஷம்சுடின் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“இந்த விசயம் அவசரகால கட்டளைச் சட்டத்தின் (தேவையான அதிகாரங்கள்) 2021- இன் 14 (1) (ஆ) துணைப் பத்தியில் இடம்பெற்றுள்ளது. இது பிரதமரின் ஆலோசனையின் பேரில் நாடாளுமன்றம் அழைக்கப்பட்டு, திட்டமிடப்பட்டு கலைக்கப்படும் என்று கூறுகிறது. இது போல, நாடாளுமன்றத்தை கூட்டுவதைத் தடுப்பதற்காக அவசரகால பிரகடனம் அமல்படுத்தப்பட்டது எனும் கருத்து தவறானது.

#TamilSchoolmychoice

“ஜனவரி 12 அன்று அவசரநிலை பிரகடனம் தொடர்பான பிரதமரின் ஆலோசனைக்கு மாமன்னர் ஒப்புதல் அளித்தது கொவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு செயலூக்கமான நடவடிக்கையாகும்,” என்று இஸ்தானா நெகாரா அறிக்கையில் கூறியுள்ளது.