Home One Line P1 அஸ்ட்ராஜெனெகா, சினோவாக் தடுப்பூசிகளைப் பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி

அஸ்ட்ராஜெனெகா, சினோவாக் தடுப்பூசிகளைப் பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி

408
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மருந்து நிறுவன ஆணையம் (பிபிகேடி), அஸ்ட்ராஜெனெகா மற்றும் சினோவாக் கொவிட் -19 தடுப்பூசிகளைப் பயன்படுத்த நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்தது.

“இந்த நிபந்தனை பதிவுக்கு, நிறுவனம் கூடுதல் மற்றும் புதுப்பித்த தரவின் பகுப்பாய்வை தேசிய மருந்து ஒழுங்குமுறை பிரிவு (என்.பி.ஆர்.ஏ) மதிப்பீடு செய்ய சமர்ப்பிக்க வேண்டும். இது தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு எப்போதும் புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்வதேயாகும். மேலும் இந்த தடுப்பூசியின் நன்மைகள் (அபாயத்திற்கு மேலான நன்மைகள்) ஒப்பீடு பயனுள்ளதாக உள்ளது,” என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த ஒப்புதலுடன் மலேசியாவில் இப்போது தொற்றுநோயைச் சமாளிக்க மூன்று தடுப்பூசிகள் இருப்பதை உறுதி செய்துள்ளது.

#TamilSchoolmychoice

முன்னதாக, பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி, பிப்ரவரி 26 முதல் நாடு முழுவதும் முன்னணி தொழிலாளர்களுக்கு செலுத்த தொடங்கப்பட்டது.

ரஷ்யாவில் உள்ள கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்தால் தயாரிக்கப்பட்ட காம்-கோவிட்-வெக் அல்லது ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை தற்போது என்.பி.ஆர்.ஏ இன்னும் மதிப்பீடு செய்து வருவதாக நூர் ஹிஷாம் கூறினார்.