பாரிஸ்: முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசிக்கு ஊழல் மற்றும் அதிகார அத்துமீறல்களுக்காக பிரெஞ்சு நீதிமன்றம் திங்களன்று மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை இரத்து செய்தது.
2007 முதல் 2012 வரை அதிபராக இருந்த சர்கோசி, தனது பிரச்சார நிதி தொடர்பான விசாரணைகள் குறித்து 2014-இல் ஒரு மூத்த நீதிபதியிடமிருந்து சட்டவிரோதமாக தகவல்களைப் பெற முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டார்.
நீதிபதி சர்கோசி சிறையில் தண்டனையைக் கழிக்கத் தேவையில்லை என்றார். அவர் வீட்டில் மின்னணு வளையலை அணிந்து தண்டனையை அனுபவிக்க முடியும்.
66 வயதான சர்கோசி பிரான்சின் வரலாற்றில் சிறைத்தண்டனை அனுபவித்த முதல் அதிபர் ஆவார்.
நீண்ட விசாரணை மற்றும் சட்ட சிக்கல்களுக்குப் பிறகு, விசாரணை கடந்த ஆண்டின் இறுதியில் தொடங்கியது. நீதிபதி சர்கோசியின் தண்டனையை திங்கட்கிழமை பிற்பகல் வழங்கினார்.