Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீக்கப்பட்டதால், நாடாளுமன்ற அமர்வை நடத்த சாஹிட் கோரிக்கை

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீக்கப்பட்டதால், நாடாளுமன்ற அமர்வை நடத்த சாஹிட் கோரிக்கை

412
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த மாமன்னரிடம் அரசாங்கம் எப்போது ஆலோசனை வழங்கும் என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கேள்வி எழுப்பியுள்ளார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நாடு முழுவதும் நிறுத்தியதாலும், மேலும் வணிகங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டதாலும் இந்தக் கேள்வியை அவர் முன்வைத்துள்ளார்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்ட மாநிலங்கள் எதுவும் இல்லை என்பதால், நாடாளுமன்றம் எப்போது மீண்டும் கூட்ட முடியும்,?” என்று அவர் முகநூலில் ஒரு பதிவில் கேட்டார்.

#TamilSchoolmychoice

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர் மற்றும் பினாங்கில் மார்ச் 5 முதல் நடைமுறைக்கு வருகிறது. அதே நேரத்தில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமலாக்கம் கெடா, கிளந்தான், நெகிரி செம்பிலான், சரவாக் மற்றும் பேராக்கில் நடப்பில் இருக்கும்.

மக்களவை அமர்வு அவசர காலத்திலும் நடைபெற வேண்டும் என்றார்.

“அமைச்சரே, தயவுசெய்து முன்னெடுத்து செல்லுங்கள். மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக கூடுவோம். இது ஒரு ஜனநாயக நாடு,” என்று அவர் மேலும் கூறினார்.