Home One Line P1 கொவிட்-19: 5 பேர் மரணம்- 2,063 புதிய சம்பவங்கள் பதிவு

கொவிட்-19: 5 பேர் மரணம்- 2,063 புதிய சம்பவங்கள் பதிவு

555
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (மார்ச் 4) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,063 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 2,054 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 9 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால் பதிவானவை. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 307,943 ஆக அதிகரித்துள்ளன.

கடந்த ஒரு நாளில் மட்டும் 2,922 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். தொற்றுகளில் இருந்து குணமாகி இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 283,629 ஆக அதிகரித்துள்ளது.

#TamilSchoolmychoice

இன்றைய நிலையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 23,161 ஆகும்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 193 பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் 99 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்றைய ஒரு நாளில் 5 மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 1,153- ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவாகி உள்ளன. சுமார் 630 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. பினாங்கில் 337 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. ஜோகூரில் 255 சம்பவங்கள் பதிவாகிய் நிலையில், சரவாக்கில் 361 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.