கோலாலம்பூர்: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து நேரடியாக தடுப்பூசி பெற அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டால், தனியார் மருத்துவமனைகள் கொவிட் -19 தடுப்பூசிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்காது.
தனியார் மருத்துவமனைகள் சங்கத்தின் (ஏ.பி.எச்.எம்) தலைவர் டாக்டர் குல்ஜித் சிங் கூறுகையில், தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி பெற அனுமதித்தால், அவர்கள் அதை கொள்முதல் செலவில் நிர்வகிப்பார்கள் என்று கூறினார்.
“தடுப்பூசிக்கு) கூடுதல் கட்டணம் வசூலிக்க மாட்டோம். நாங்கள் எந்த விலைக்கும் வாங்குவோம். நாங்கள் இலாபம் ஈட்டப் போவதில்லை என்பதால் மக்கள் செலுத்த வேண்டிய தொகை இதுதான்,” என்று குல்ஜித் மேற்கோளிட்டுள்ளார்.
தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக தடுப்பூசிகளை வாங்க அனுமதித்தால், அவர்கள் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளை மட்டுமே தேர்வு செய்வார்கள் என்றார்.
146 ஏபிஎச்எம் உறுப்பினர்கள் மற்றும் 64 உறுப்பினர் அல்லாத மருத்துவமனைகளும் இலவச தடுப்பூசிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்காததன் மூலம், நடந்து வரும் தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை ஆதரிக்க தயாராக இருப்பதாக குல்ஜித் கூறினார்.
தற்போது, தனியார் மருத்துவமனைகளின் நோக்கம், தடுப்பூசியை விரைவில் பரப்ப உதவுவதாகும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்ரு அவர் கூறினார்.