Home One Line P2 உலக மகளிர் தினம் : ராகா அறிவிப்பாளர்களின் அனுபவங்கள்

உலக மகளிர் தினம் : ராகா அறிவிப்பாளர்களின் அனுபவங்கள்

559
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று கொண்டாடப்படும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ராகா வானொலியில் பணியாற்றும் மகளிர் அறிவிப்பாளர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்:

1. ராகாவில் உங்களின் தற்போதையப் பணியைப் பற்றியச் சுருக்கமானப் பின்னணியைப் (அங்கம், ராகாவில் பணியாற்றிய ஆண்டுகளின் எண்ணிக்கை மற்றும் பல) பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

அஹிலா சண்முகம்,

அஹிலா: நான் 10 ஆண்டுகளாக ராகாவில் வானொலி அறிவிப்பாளராகப் பணியாற்றி வருகிறேன். தற்போது எனது இணை அறிவிப்பாளர், சுரேஷுடன் இணைந்து காலை 6 மணி முதல் 10 மணி வரை, திங்கள் முதல் வெள்ளி வரை ‘கலக்கல் காலை’ நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்குகிறேன்.

#TamilSchoolmychoice

ரேவதி: நான் சுமார் 16 ஆண்டுகளாக ராகா அறிவிப்பாளராகப் பணியாற்றி வருகிறேன். தற்பொழுது ‘வணக்கம் ராகா’ மற்றும் ‘இன்னிக்கி என்ன கதை’ உள்ளிட்ட இரண்டு அங்கங்களைத் தொகுத்து வழங்குகிறேன். இரசிகர்களுக்கு விருப்பமானப் பாடல்களை ஒலிபரப்புதல், அவர்களை ஊக்குவித்தல், புதிய தகவல்களைப் பகிர்ந்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் நான் அவர்களை மகிழ்விக்கிறேன்.

2. #ChooseToChallenge என்ற 2021 சர்வதேச மகளிர் தினச் சுலோகம் உங்களுக்கு எவ்வகையில் அர்த்தமானது என்று கூறுங்கள்?

அஹிலா: ஒவ்வொரு மனிதனும் பல்வேறு வகையானச் சவால்களைத் தினமும் எதிர்க்கொள்கின்றனர். குறிப்பாகப் பெண்கள் தங்களின் வாழ்க்கையில் பல வகையானச் சவால்களை வெவ்வேறுக் கட்டங்களில் எதிர்கொள்கின்றனர். என்னைப் பொறுத்தவரை, #ChooseToChallenge சுலோகம் என்பது பலச் சவால்களை எதிர்க்கொண்டாலும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க விரும்பும் பெண்களைப் பற்றியது. சவாலைச் சமாளிக்க அவர்கள் மேற்கொள்ளும் தேர்வே அவர்களின் வெற்றிக்கான முதல் படியாகும்.

ரேவதி

ரேவதி: சவால்கள் பெரும்பாலும் வெற்றிக்கான முதற்படியாகும். எனவே, எந்தவிதமானச் சவால்களையும் எதிர்க்கொள்ளத் தயங்காதீர்கள்.

3. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குறிக்கோள்களையும் எவ்வாறு பொழுதுபோக்கு துறையின் கோரிக்கைகளோடுச் சமநிலைப்படுத்துகிறீர்கள்?

அஹிலா: நேர நிர்வாகம் மற்றும் திட்டமிடல் ஆகியவை எனது வெற்றிக்கான முக்கியக் காரணங்களாகும். நான் எப்போதும் திட்டமிட்டுச் செயல்படுவேன். எப்பொழுதும் நேரம் தவறான்மையைப் பின்பற்ற முயற்சிப்பதால் எனது வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டையும் திறம்பட நிர்வகிக்க முடிகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இவ்விரண்டுப் பண்புகளும் எனக்குப் பெரிதும் உதவின.

ரேவதி: ஒவ்வொரு நாளும், நான் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதோடு அவற்றை எனது பணியிலும் பயன்படுத்துவேன். மக்களை ஊக்குவிப்பது என்னையும் ஊக்குவிக்கும்.

4. உங்களைப் போலவே ஒரு தொழிலில் இணைய விரும்பும் பெண்களுக்கு உங்களின் ஆலோசனைகள் யாவை?

அஹிலா: பொழுதுபோக்குத் துறையில் இணைய விரும்புபவர்கள் முதலில் இத்துறையைப் பற்றியும் இத்துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் அறிந்துக் கொள்ள வேண்டும். சில நுண்ணறிவுகளைப் பெற அதைப் பற்றி அறிந்தவர்களிடம் பேசுங்கள். மிக முக்கியமாக, ஒருவர் தன்னை வளர்த்துக் கொள்ளும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ரேவதி: புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும்போது துணிவாகவும், வலிமையாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும்.

5. சர்வதேச மகளிர் தின வாழ்த்து / செய்தியை உங்கள் இரசிகர்களுக்குப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

அஹிலா: அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். வீட்டில் ஒரு முக்கியப் பங்கை வகிப்பதோடுப் பணியிடத்திலும் ஏராளமானப் பதவிகளை வகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பெண்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்களே. ஒரு தனித்துவமான மனிதனாக, நம்மையும் மற்ற பெண்களையும் கொண்டாடுவோம்.

ரேவதி: அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். உங்களை எண்ணிப் பெருமிதம் கொள்ளுங்கள். ஒரு பெண் சக்தி, நீங்கள் கற்பனைச் செய்ததை விடப் பெரியது. நீங்கள் தைரியமாகவும், வலிமையாகவும், சவால்களை ஏற்பவராகவும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். இன்றையத் தினத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள். உங்கள் வாழ்க்கையை வாழுங்கள், நீங்கள் அற்புதங்களை ஏற்படுத்தலாம். நான் என்னை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன், நீங்களும் உங்களை எண்ணிப் பெருமிதம் கொள்ளுங்கள்.