Home One Line P1 அவசரகாலம் எதிர்ப்பு: குவான் எங் ஒரு மணி நேரம் விசாரிக்கப்பட்டார்

அவசரகாலம் எதிர்ப்பு: குவான் எங் ஒரு மணி நேரம் விசாரிக்கப்பட்டார்

539
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: ஜனவரி 12-ஆம் தேதி நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றம் வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கை தொடர்பாக பினாங்கு வடகிழக்கு மாவட்ட காவல் நிலையத்தில் ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஒரு மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.

பொது தேசத் துரோகத்தை ஏற்படுத்துவது தொடர்பாக, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998- இன் தண்டனைச் சட்டம் பிரிவு 233- இன் பிரிவு 505 (பி)- இன் கீழ் லிம் விசாரிக்கப்பட்டார் என்று அவரது வழக்கறிஞர் ஆர்.எஸ்.என். ராயர் கூறினார்.

“ஜனவரி 12-ஆம் தேதி நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றம் அறிக்கை தொடர்பான விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைத்துள்ளோம், ” என்று அவர் பினாங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

“அவசரகாலத்தில் நாடாளுமன்றம் அமர முடியும் என்ற மாமன்னரின் உத்தரவுக்கு கீழ்ப்படியாத சட்ட அமைச்சர் தக்கியுடின் ஹசான் குறித்த, பேராக் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் அஜீஸ் பாரி அளித்த அறிக்கையையும் காவல்துறை விசாரிக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

அன்வார் பிப்ரவரி 26 அன்று தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் கோலாலம்பூரில் முகமட் சாபு நாளை வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படுவார் என்று ராயர் கூறினார்.