Home One Line P1 10,000 ரிங்கிட் அபராதம் விண்ணப்பத்தின் வழி குறைக்கப்படலாம்

10,000 ரிங்கிட் அபராதம் விண்ணப்பத்தின் வழி குறைக்கப்படலாம்

521
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை மீறிய குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மொத்த 10,000 ரிங்கிட் அபராதம் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் விண்ணப்பத்தின் மூலம் குறைக்கப்படலாம் என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

அபராதம் விதித்த காவல் துறை அதிகாருக்கு அதிகாரம் இல்லை, ஏனெனில் குற்றவாளிகளுக்கு அபராதங்களை வழங்குவதற்கான பணி மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

“ஒரு நபருக்கு 10,000 ரிங்கிட்டிலிருந்து 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்க ஒரு காவல் துறை அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எந்தவொரு காவல் துறை அதிகாரிக்கும் எந்த அதிகாரமும் அனுமதிக்கப்படவில்லை. எனவே அறிவிப்பில் 10,000 ரிங்கிட் இருப்பதால், அதுவே எழுதப்படும்.

#TamilSchoolmychoice

“ஆனால், நான் முன்பு பரிந்துரைத்தபடி, இந்த அபராதத்தின் இலக்கு பிடிவாதமாக மீண்டும் குற்றங்களைச் செய்வபர்களை இலக்காகக் கொண்டுள்ளது,” என்று புக்கிட் அமானில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.