Home One Line P1 ஆசிரியரை தகாத வார்த்தையால் திட்டிய மாணவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்

ஆசிரியரை தகாத வார்த்தையால் திட்டிய மாணவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்

637
0
SHARE
Ad

கோத்தா பாரு: ஆசிரியரை தகாத வார்த்தையால் குறிப்பிட்ட இருவர் மாணவர்கள் இன்று கோத்தா பாரு கீழ்நிலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

அண்மையில் அவர்கள் எஸ்பிஎம் தேர்வு எழுதி முடித்தப் பிறகு சம்பந்தப்பட்ட ஆசிரியரை குறி வைத்து, பள்ளிச் சீருடையின் பின்புறத்தில் அவ்வார்த்தைகளை எழுதியிருந்தனர்.

குற்றச்சாட்டின் படி, சம்பந்தப்பட்ட இரண்டு இளைஞர்கள் உள்ளூர் அமைதியைக் குலைக்கும் அவமானங்கள் அல்லது ஆபாசமான சட்டைகளை அணிந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மார்ச் 3-ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோத்தா பாருவில் இந்த குற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் சிறு குற்றச் சட்டம் 1955- இன் பிரிவு 14- ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர். அதே சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம்.

இதற்கிடையில், முகமட் இசுடின் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்கினார்.

இந்த வழக்கு மீண்டும் ஜூன் 22 அன்று மீண்டும் குறிப்பிடப்படும்.