Home One Line P1 காவல் துறை தேசிய கூட்டணியின் கருவி அல்ல!

காவல் துறை தேசிய கூட்டணியின் கருவி அல்ல!

473
0
SHARE
Ad


கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்கும் ஒரு கருவியாக காவல் துறை பயன்படுத்தப்படுகிறது என்ற சில தரப்பினரின் குற்றச்சாட்டுகளை காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் மறுத்தார்.

“யார் வேண்டுமானாலும் காவல் துறை அரசாங்கத்திற்கு ஆரதவாக உள்ளது என்ற யூகங்கள், விமர்சனங்கள், அனுமானங்கள் மற்றும் எதையும் கூறலாம். எனது தரப்பு எந்த நடவடிக்கைகளை எடுத்தாலும், அதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற எனது உறுதியான நிலைப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

“முன்னதாக, கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் காவல் துறை எதிர்க்கட்சி தரப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்பட்டது,” என்று அவர் இன்று புக்கிட் அமானில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

காவல் துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்கள், தேசிய கூட்டணி, ஆதரவை அதிகரிக்க அரசியல் ஆயுதமாக பயன்படுத்தியது என்ற நம்பிக்கை கூட்டணியின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.