Home One Line P1 மலாய் மொழியில் தேர்ச்சிப் பெறாதவர்கள், காவல் படையில் இணைய விண்ணப்பிக்கலாம்

மலாய் மொழியில் தேர்ச்சிப் பெறாதவர்கள், காவல் படையில் இணைய விண்ணப்பிக்கலாம்

502
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய காவல் படையில் எஸ்பிஎம் மலாய் மொழியில் தேர்ச்சிப் பெறாத பூமிபுத்ரா அல்லாதவர்கள் இனி கான்ஸ்டபள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று காவல் துறை  தெரிவித்துள்ளது.

பூமிபுத்ராக்கள் அல்லாதவர்களும், பூர்வக்குடியினரும் மார்ச் 18 முதல் 31 வரை https://epengambilanpdrm.rmp.gov.my வழியாக விண்ணப்பிக்கலாம்.

இந்த சிறப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கை மலாய் மொழியில் தேர்ச்சிப் பெறாதவர்களை விண்ணப்பிக்க அனுமதிக்கும் என்று புக்கிட் அமான் மேலாண்மைத் துறை இயக்குநர் டத்தோ ராம்லி தின் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“சீன மொழி, தமிழ் அல்லது பிற தாய்மொழிகளைப் பேசவும் எழுதவும் பூமிபுத்ரா அல்லாத விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், சிறப்புப் பயிற்சியின் கீழ், படையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு எஸ்.பி.எம் மலாய் மொழி தேர்வை மீண்டும் அமர ஆறு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும் என்று ராம்லி கூறினார்.

“அவர்கள் தோல்வியுற்றால், காவல் துறையிலிருந்து அவர்களது சேவைகளை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை,” என்று அவர் கூறினார்.