கோலாலம்பூர்: தொற்று மற்றும் அவசர பிரகடனத்தின் போது போலி செய்திகளை வெளியிடுவோரை குற்றவாளியாக்கும் அவசரநிலை கட்டளை, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
தவறான தகவல்களை பரப்புவோர் மீது காவல் துறை நடவடிக்கை எடுப்பதை இது எளிதாக்குகிறது என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
இந்த கட்டளை மூலம், விசாரணைக்கு காவல் துறை விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இது முன்னர் இதற்காக நீண்ட நேரம் எடுக்கும் என்றும் வர் கூறினார்.
“சமூக ஊடகங்களில் 24 மணிநேரமும் இடுகையிடப்பட்ட அனைத்தையும் கண்காணிக்கும் ஒரு குழு உள்ளது,” என்று அவர் கூறினார்.
“போலி செய்திகள் பயம், பொது சலசலப்பு மற்றும் கோபத்தைத் தூண்டும் நோக்கம் கொண்டது. இதுபோன்ற குற்றங்களுக்கு இனி ஒப்புதல் பெற காவல் துறை காத்திருக்க தேவையில்லை என்பதால் அரசாங்கத்தின் முடிவை நான் வரவேற்கிறேன்,” என்று அவர் கூறினார்.