Home One Line P2 தேமுதிக – அமமுக கைகோர்க்கின்றன!

தேமுதிக – அமமுக கைகோர்க்கின்றன!

1000
0
SHARE
Ad

சென்னை : அடுத்தடுத்து தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டு வரும் திருப்பங்களில் அடுத்த அதிரடித் திருப்பமாக டிடிவி தினகரனின் அமமுக கட்சியும், விஜய்காந்தின் தேமுதிக கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

இந்தக் கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதில் 23 தொகுதிகள் தனித் தொகுதிகளாகும்.

இந்தத் தொகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அமமுக வேட்பாளர்கள் மீட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

#TamilSchoolmychoice

அதிமுக கூட்டணியில் இணைவதற்காக தேமுதிக நடத்திய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, எல்லாத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என தேமுதிக அறிவித்திருந்தது.

அதே வேளையில் அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரனுடன் கூட்டணி பேச்சுவார்த்தையும் தொடர்ந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

தேமுதிக பட்டியல்படி விஜய்காந்த் மனைவி பிரேமலதா விஜய்காந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு ஏற்கனவே விஜய்காந்த் போட்டியிட்டிருக்கிறார்.