Home One Line P2 இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தேர்தலில் பங்கேற்கவில்லை- அர்ஜுனமூர்த்தி

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தேர்தலில் பங்கேற்கவில்லை- அர்ஜுனமூர்த்தி

593
0
SHARE
Ad

சென்னை: ஏப்ரல் 6 நடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி பங்கேற்காது என்று அதன் தலைவர் ரா.அர்ஜுனமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தங்கள் கொள்கையின் அடிப்படையில் கள பலத்தை வளர்த்துக் கொள்வதுடன், மேலும் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மாற்று சக்தியாக இருப்பதற்கான தங்கள் பணியை வலுப்படுத்த இருப்பதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தது, அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு, ரஜினியின் ஆதரவாளரான ரா.அர்ஜுனமூர்த்தி புதிய கட்சியைத் தொடங்கினார்.

#TamilSchoolmychoice

மார்ச் 9- ஆம் தேதி இக்கட்சி ரோபோட் சின்னத்தையும், அதன் எண்ணங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ஆனால், அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட பெரும்பாலான எண்ணங்கள், அடுத்த சில நாட்களில் மற்ற முன்னணி அரசியல் கட்சிகள், தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் உள்ளடக்கி வெளியிட்டதாக அவர் கூறினார்.