Home One Line P1 நாடாளுமன்றம்: பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டாம்!

நாடாளுமன்றம்: பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டாம்!

619
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடாளுமன்றம் மீண்டும் கூடினால், பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டாம் என்று  ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.

இது குறித்து உறுதியளிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் அவர் கேட்டுக் கொண்டார்.

கொவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் மற்றும் காவல் படையின் நேர்மை மற்றும் தொழில் திறன் குறித்த விசாரணை ஆணையம் (ஆர்.சி.ஐ) விவாதங்களுக்கு நாடாளுமன்றம் கவனம் செலுத்த வேண்டி உள்ளதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“அவசரகாலத்தின் போது நம்பிக்கையில்லா தீர்மானங்கள் ஏற்படுத்தக் கூடாது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உறுதியளிக்க வேண்டும். இதனால் கொவிட் -19- க்கு எதிரான போராட்டத்தில் நாடாளுமன்றம் கவனம் செலுத்த முடியும். அரசாங்கமும், தனிநபர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து முயற்சிகளை அணிதிரட்டுவதால்  தொற்றைக் கட்டுப்படுத்துவதில் நாடு ஒரு சிறந்த அடைவை பதிவுசெய்ய முடியும், ” என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் தடுப்பூசி பெற்றுவிட்ட நிலையில், பிற அமைச்சர்களும் இப்போது ஒவ்வொருவராகப் பெற்று வருவதை அவர் சுட்டிக் காட்டினார். அதனால் நாடாளுமன்ற அமர்வை ஏற்படுத்துவது சாத்தியம் என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 24 அன்று, நாடாளுமன்றம் அவசரகால சூழ்நிலையில் கூட முடியும் என்று மாமன்னர் அண்மையில் அறிவித்திருந்தார்.