Home One Line P1 வட்டி முதலைகளிடமிருந்து கடன் பெறும் காவல் துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை

வட்டி முதலைகளிடமிருந்து கடன் பெறும் காவல் துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை

878
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: அரசால் அங்கீகரிக்கப்படாத வட்டி முதலைகளிடமிருந்து கடன் பெறும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கெடா காவல் துறை தலைவர் ஹசனுடின் ஹசான் தெரிவித்தார்.

சட்டவிரோத பணக் கடன் வழங்குநர்களிடமிருந்து (ஆலோங்) கடன் வாங்குவது ஒழுக்காற்று குற்றமாகும், ஏனெனில் எந்தவொரு கடனையும் பெறுவதற்கு முன்பு காவல் துறையினர் துறைத் தலைவரிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.

“ஒரு காவல் துறை அதிகாரி வட்டி முதலையிடம் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், அவரது வீட்டில் சிவப்பு வண்ணப்பூச்சு தெறிக்கப்படும். அவர் புகார் அளிக்கும்போது, ​​துறைத் தலைவரின் அனுமதியின்றி கடன் வாங்கியதற்காக விசாரணை நடத்தப்படும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

வட்டி முதலைகளிடமிருந்து காவல் துறையினர் கடன் வாங்கியதாக எந்த புகாரும் தனக்கு கிடைக்கவில்லை என்று ஹசனுடின் கூறினார். மேலும், இவர்கள் இம்மாதிரியான நபர்களிடம் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று அவர் எச்சரித்தார்.