Home One Line P1 ‘இரட்டை பிறழ்வு’: இந்தியாவில் புதிய கொவிட் -19 பிறழ்வின் அபாயம் பரிசோதிக்கப்படுகிறது

‘இரட்டை பிறழ்வு’: இந்தியாவில் புதிய கொவிட் -19 பிறழ்வின் அபாயம் பரிசோதிக்கப்படுகிறது

591
0
SHARE
Ad

புது டில்லி: கொவிட்-19 தொற்றின் புதிய “இரட்டை பிறழ்வு” இந்தியாவில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே நச்சுயிரியில் இரண்டு பிறழ்வுகள் ஒன்று சேரும் மாறுபாடு, பெரும் தொற்றுநோயாகவோ அல்லது தடுப்பூசிகளால் கட்டுப்படாத நச்சுயிரியாக இருக்குமா என்று விஞ்ஞானிகள் சோதிக்கின்றனர்.

எல்லா தொற்றுகளைப் போலவே, கொவிட்-19 தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவும் போது அதன் வழிகளில் மாறிக்கொண்டே இருக்கும்.

#TamilSchoolmychoice

மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவிலிருந்து சேகரிக்கப்பட்ட இந்த மாதிரிகள் குறித்த பகுப்பாய்வு கடந்த ஆண்டு டிசம்பரில் பெறப்பட்ட மாதிரிகளைக் காட்டிலும் வித்தியாசப்படுகிறது. “E484Q மற்றும் L452R பிறழ்வுகளுடன் கூடிய தொற்றுகள் அதிகரிக்கத் தொடங்கியது.