Home One Line P1 15-வது பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பெர்சாத்துவுடனான உறவு துண்டிக்கப்படும்

15-வது பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பெர்சாத்துவுடனான உறவு துண்டிக்கப்படும்

628
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சர் பதவியில் இருக்கும் அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப், பெர்சாத்துவுடன் அம்னோ உறவை முறிக்கும் என்று கூறினார்.

அம்னோவிற்கும் பெர்சாத்துவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு 15- வது பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் முடிவடையும் என்று அவர் கூறினார்.

“அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை, இன்று அரசாங்கத்தில் இருப்பவர்கள் தேர்தல் வரை தொடர்ந்து அதை ஆதரிப்பார்கள். (அம்னோ) உச்சமன்றம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் பெர்சாத்துவுடனான எங்கள் ஒத்துழைப்பு முடிவடையும் என்று முடிவு செய்துள்ளது. அது தெளிவாக உள்ளது. உச்சமன்ற முடிவை யாரும் கேள்விக்குட்படுத்துவதாக நான் நினைக்கவில்லை,” என்று அவர் நேற்று அம்னோ இணையதள பேட்டியில் கூறினார்.

#TamilSchoolmychoice

இஸ்மாயில் சப்ரி யாகோப் தற்போது, தற்காப்பு அமைச்சராக உள்ளார்.

பெர்சாத்து உடனான ஒத்துழைப்புடன் முடியும் என்று கூறியதுடன், பிகேஆர் மற்றும் ஜசெகவுடன் கூட்டணி இல்லை என்ற கட்சியின் நிலைப்பாடும் தெளிவாக உள்ளது என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

“இல்லை பிகேஆர், ஜசெக இல்லை. இதுவும் உச்சமன்றத்தால் முடிவு செய்யப்பட்டது. தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி, தேர்தலை எதிர்கொள்ள பிகேஆருடன் அம்னோ பேச்சுவார்த்தை நடத்தாது என்று கூறியிருந்தார். அதுவும் எங்கள் முடிவு என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.