Home அரசியல் வீணாக பயங்காட்ட வேண்டாம் – நஜிப்பிற்கு அன்வார் எச்சரிக்கை

வீணாக பயங்காட்ட வேண்டாம் – நஜிப்பிற்கு அன்வார் எச்சரிக்கை

488
0
SHARE
Ad

Anwar-Ibrahim-300x202கோலாலம்பூர், ஏப்ரல் 18- தேவையில்லாமல் வர்த்தக சமூகத்தினரை பயம் காட்ட வேண்டாம் என்று பிரதமர் நஜிப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் அன்வார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் புளுமெர்க் செய்தி சேவைக்கு பேட்டியளித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வெற்றி பெற்றால் மலேசிய பங்கு சந்தை அதி பாதாளத்தில் விழும் என்றும், ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சியடையும் என்றும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்துரைத்த  எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதுபோன்ற பயங்காட்ட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மத்திய அரசாங்கத்தை மக்கள் கூட்டணி கைப்பற்றினால்  மலேசியாவை நீண்ட அளவில் பொருளாதாரத்தில் உயர்த்த பாடுபடுவோம் என்றும், மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை 6 விழுக்காட்டிற்கு கூடுதலாக வைத்திருக்க முடியும் என்றார்.

நஜிப்பை போன்று இருண்ட எதிர்காலத்தை நாங்கள் கொண்டிருக்கவில்லை என்றும், மாற்றத்தை ஏற்படுத்தி முன்னேறுவதே எங்கள் கொள்கை என்றும் அன்வார் கூறினார்.