Home 13வது பொதுத் தேர்தல் ஜ.செ.க சார்பாக கோத்தா ஆலம் ஷாவில் ஹிண்டாராப் கணபதி – பூச்சோங்கில் கோபிந்த் சிங் போட்டி

ஜ.செ.க சார்பாக கோத்தா ஆலம் ஷாவில் ஹிண்டாராப் கணபதி – பூச்சோங்கில் கோபிந்த் சிங் போட்டி

627
0
SHARE
Ad

gobind_250_250கோலாலம்பூர், ஏப்ரல்19- சிலாங்கூர் மாநிலத்தில் ஜ.செ.க கட்சி 4 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 15 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது. அத்தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைமை செயலாளர் லிம் குவான் எங் நேற்று அறிவித்தார்.

அதன்படி, பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியில் கோபிந்த் சிங் டியோவும்(படம் இடது), கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் சார்லஸ் சந்தியாகோவும் (படம் வலது) Charles-Santiago-Sliderபோட்டியிடவுள்ளனர்.

மேலும் கோத்தா ஆலாம் ஷா சட்டமன்றத் தொகுதியில் ஹிண்டாராப் போராட்டவாதியும், சிலாங்கூர் ஜ.செ.க. உச்சமன்ற உறுப்பினருமான வி.கணபதிராவ் போட்டியிடவுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 2008ஆம் ஆண்டுத் தேர்தலில், இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹிண்டாராப் போராட்டவாதி மனோகரன் மலையாளத்திற்கு பதிலாக, இம்முறை கணபதிராவ் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.