Home One Line P1 இசிஆர்எல் 3.0: 50 பில்லியன் செலவில் கட்டப்படும்

இசிஆர்எல் 3.0: 50 பில்லியன் செலவில் கட்டப்படும்

579
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிழக்குக் கரை இரயில் இணைப்பு (இ.சி.ஆர்.எல்) திட்டம் மூன்றாவது முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அதற்கு இ.சி.ஆர்.எல் 3.0 என பெயரிடப்பட்டுள்ளது.

மொத்தம் 665 கி.மீ. பரப்பளவில், இ.சி.ஆர்.எல் 3.0 பகாங் மற்றும் சிலாங்கூரை இணைக்கும். இது முன்னதாக தேசிய முன்னணி நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டது. இதற்கு 50 பில்லியன் ரிங்கிட் செலவாகும்.

கட்டுமானம் ஏழு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்.

#TamilSchoolmychoice

மாநில அரசுகள், ஊராட்சி மன்றங்கள் மற்றும் தொழில்துறைகள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்புகளுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து இத்திட்டம் குறித்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நம்பிக்கை கூட்டணி நிர்வாகத்தின் கீழ் இ.சி.ஆர்.எல் 3.0- க்கான மதிப்பிடப்பட்ட செலவு அதன் முந்தைய செலவுகளை விட குறைவாக உள்ளது என்று வீ கூறினார்.

“50 பில்லியன் ரிங்கிட், 47.38 பில்லியன் ரிங்கிட்டை (நம்பிக்கை கூட்டணி கீழ்) விட அதிகமாக இருப்பதாக சிலர் கூறலாம், ஆனால் நாங்கள் இரண்டு  திட்டங்களை இந்த விலைக்கு கொண்டு வந்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.