கோலாலம்பூர், ஏப்ரல்19- தேசிய முன்னணி வேட்பாளராக சுல்கிப்ளி ஷாஆலம் நாடாளுன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது நிச்சயமாகி விட்டது.
இந்துகளின் மனம் நோகும்படி விமர்சனம் செய்த சுல்கிப்ளி தேசிய முன்னணி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதற்கு ம.இ.கா. தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என சுங்கை சட்டமன்ற வேட்பாளர் அ.சிவநேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஷாஆலம் தொகுதியில் போட்டியிடும் சுல்கிப்ளியை அங்குள்ள இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு மேடைகளிலும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அம்னோ அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்வதாக கூறும்போது,ம.இ.கா. தலைவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர்.
ஆனால் இந்து சமூகத்தினரை இழிவுப்படுத்தும் வகையில் பேசியுள்ள சுல்கிப்ளி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதற்கு ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.
ஒட்டு மொத்த இந்தியர்களின் மனநிலையை உணர்ந்து பழனிவேல் அவர்கள் பிரதமரிடம் சுல்கிப்ளி குறித்து எடுத்துரைப்பாரா?